பொதுத்தேர்வு முடிவில் அதிரடி மாற்றம்…. ரேங்க் பட்டியல் ரத்து…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!

பொதுத்தேர்வு முடிவில் அதிரடி மாற்றம்…. ரேங்க் பட்டியல் ரத்து…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!

சென்னை : சிபிஎஸ்இ அறிவிக்கும் முறை போலவே மாநில அரசும் கடைப்பிடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பில் இனி ரேங்க் இல்லை என அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் கொஞ்ச நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ரேங்க் பட்டியல் கிடையாது.

மாநில அரசும் மத்திய அரசைப் போல கிரேடு முறைகளை அறிமுகப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றத்தால் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

அதிரடி அறிவிப்பு

பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பில் இனி ரேங்க் பட்டியல் இல்லை. சிபிஎஸ்இ அறிவிக்கும் முறை போல மாநில அரசும் கடைபிடிக்கும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. மேலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் பட்டியல் வெளியிடப் போவதில்லை மற்றும் மாநில அளவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப் போவதில்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்காலிக சான்றிதழ்

மேலும் 15ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விபரங்களை அளித்து இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 17ந் தேதி முதல் பள்ளியில் இருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்

12ந் தேதி முதல் 15ந் தேதி வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மொழிப்பாடங்களுக்கு ரூ. 305 மற்றும் மற்றப்பாடங்களுக்கு ரூ. 205 செலுத்தி மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மறுகூட்டல் முடிவுகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

உளவியல் ஆலோசனை

தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு 104 என்கிற இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்புத் தேர்வுகளும் ஜூன் மாதத்தில் தமிழ அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் இதைப் பயன்படுத்தி வெற்றியை மறுபடியும் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *