சிலவரிச் செய்திகள்

மதுரை மாவட்டம் வடபழஞ்சி கிராமத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலம் புதிதாக திறக்கப் பட்டுள்ளது.

6 முறை குத்துச்சண்டை சாம்பியன் பெற்ற மேரி கோம், ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற (51 கிலோ எடைப்பிரிவில்) 3 போட்டிகளிலும் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மேரிகோம் வழக்கமாக பங்கேற்கும் 48 கிலோ எடைப்பிரிவு நீக்கப்பட்டு 51 கிலோ எடை பிரிவு சேர்க்கப்படுகிறது. இதற்கான பயிற்சியை பெர்லினில் மேரிகோம் மேற்கொண்டு வருகிறார்.

மதுரையில் மார்ச் மாதத்தில் கடந்த 1996- ஆம் ஆண்டு அதிகபட்ச வெப்பநிலையாக 106 டிகிரி பதிவாகியிருந்தது. இதுவே மதுரையில் கடந்த 140 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 2019 மார்ச் 07 அன்று 106 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது.தமிடிநநாட்டில் ஆதிதிராவிடர்கள் என பட்டியலிடப்பட்டுள்ள ஆறு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல

வேளாளர் என்று அழைப்பது குறித்து ஆய்வு செ ய்து அரசுக்கு பரிந்துரை செ ய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ’ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஆ ய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் எதேச்சாதி காரத்தை எதிர்த்துப் போராடி உயிரை இழந்த பிரமலைக்கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த 16 பேரை கௌரவிக்கும் நோக்கில் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் கடந்ததைக் குறிக்கும் வகையில் ’மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பெருங்காநல்லூரில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.