இத்தேர்வை 2.1 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு
வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு 6ம் தேதி (நாளை) முதல் தொடங்க உள்ளது
இந்த பணியிடங்களுக்காக 22 விழுக்காடு பெண்கள் மற்றும் 6 திருநங்கை விண்ணப்பதாரர் உள்பட ஏறத்தாழ 2.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் உள்ள ஆடை குறியீட்டை பின்பற்ற வேண்டும்
மேலும் அனுமதி சீட்டினை மட்டும் (லேசர் கலர் பிரிண்டர்) மற்றும் ஆறு அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை அசலாக (ஆதார் கார்டு, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, குடும்ப அட்ைட) உடன் எடுத்து வர வேண்டும்
மொபைல் போன், மின்னணு உபகரணம், தரவு அட்ைட, பணப்பை, சிறிய பை போன்றவற்றை தேர்வு கூடத்திற்கு உள்ளே எடுத்துவரக் கூடாது. வனவர் பதவிக்கு 1,10,782 பேர் விண்ணப்பித்துள்ளனர்
இதற்கான இணையவழி தேர்வு 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை 4 தொகுதிகளாக நடைபெறும். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 139 தேர்வு மையங்களில் நடக்கிறது
வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் 878 பணியிடங்களுக்கு 98,801 பேர் விண்ணப்பித்துள்ளனர்
இதற்கான இணைவழி தேர்வு வருகிற 10ம் தேதி வரை 4 தொகுதிகளாக நடைபெறும்
இந்த இணையவழி தேர்வு தமிழகம் முழுவதும் 122 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது