வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி(2014) டி.என்.பி.எஸ்.சி. நடத்திய கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) பதவிக்கான எழுத்துத் தேர்வின் முடிவுகள், டிசம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.

VAO பதவியில் காலியாக இருந்த 2,342 பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட தேர்வை, 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர் எழுதினர். அவர்களில், 6 லட்சத்து 71 ஆயிரத்து 506 நபர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை(mark & rank position) ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பொது தரவரிசை நிலை(overall rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலை(community wise rank) மற்றும் சிறப்பு பிரிவினருக்கான தரவரிசை நிலை(special category) ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வெழுதியோர், தங்களுக்கான விபரங்களை, தங்களின் பதிவு எண்ணை(Register number) உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள், அவர்களின் தரவரிசை நிலை, காலியிட நிலை மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல், விரைவில், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

அனைத்து தகவல்களையும் விரிவாக அறிய www.tnpsc.gov.in.