மே 16, 17ம் தேதிகளில் டான்செட் பொது நுழைவுத்தேர்வு

மே 16, 17ம் தேதிகளில் டான்செட் பொது நுழைவுத்தேர்வு

முதுநிலை பொறியியல், எம்.டெக்., – எம்.ஆர்க்., – எம். பி.ஏ., – எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கான, பொது நுழைவுத்தேர்வான டான்செட் தேர்வு, மே மாதம் 16, 17ம் தேதிகளில் நடக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

* எம்.சி.ஏ.,வுக்கான நுழைவு தேர்வு, 16ம் தேதி காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை.

* எம்.பி.ஏ.,வுக்கான நுழைவு தேர்வு, 16ம் தேதி, பிற்பகல் 2:30 மணி முதல், மாலை 4:30 மணி வரை.

* எம்.இ., – எம்.டெக்.,க்கான நுழைவு தேர்வு, 17ம் தேதி காலை, 10:00 மணி முதல், 12:00 வரை நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு, டான்செட் தேர்வுக்கு, ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர், ஏப்ரல், 1ம் தேதி முதல், ஆன்லைனிலும், நேரடியாகவும் விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பெற கடைசி தேதி ஏப்., 20

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி ஏப்., 22.

இத்தகவலை, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, அண்ணா பல்கலையின், www.annauniv.edu/tancet2015 என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.