முதுநிலை படிப்புக்கான ‘டான் செட்’ தேர்வு அறிவிப்பு

முதுநிலை படிப்புக்கான ‘டான் செட்’ தேர்வு அறிவிப்பு

‘அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், ‘டான் செட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., – எம்.டெக்., – எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர, ஜூன், 12ல், ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு எழுத விரும்புவோர், மே, 5 முதல் மே, 17 வரை, ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலையின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 500 ரூபாய்; தலித், அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, 250 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.