மகளிர் கிரிக்கெட் முதல் இடத்தில் மிதாலிராஜ்


பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் மீண்டும் முதலிடத்தை (762 புள்ளி) பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு முன்பாக 8-வது இடத்தில் இருந்த மிதாலிராஜ் இந்த தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் (72, 59, 75 ரன்) விளாசியதன் மூலம் நம்பர் ஒன் அரியணையில் ஏறியுள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்த மிதாலிராஜ் கடைசியாக 2018-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சத்தில் இருந்தார். தற்போது 8-வது முறையாக முதலிடத்தை அலங்கரிக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ 758 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்