நவம்பர் 05

நவம்பர் 05
  • 1912 – பிரிட்டனில் திரைப்பட தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
  • 1556 – முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.
  • 1940 – பிராங்கிளின் ரோசவெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1996 – பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
  • 2006 – 148 ஷியா முஸ்லிம்களை 1982இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது.

பிறப்புக்கள்

  • 1870 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • 1920 – டக்லஸ் நார்த், அமெரிக்க பொருளியலாளர், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வென்றவர்.