நவம்பர் 01

நவம்பர் 01
  • 1959 – பிரபல நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மரணம்.
  • 1755 – ஆறு நிமிடங்களுக்குத் தொடர்ந்து கடுமையான நில நடுக்கம் போர்ச்சுகீசிய தலைநகர் லிஸ்பனில் ஏற்பட்டது. அந்த நகரமே தரைமட்டமானது. சுமார் 60,000 பேர் இறந்தனர்.
  • 1849 – பதிவுத் தபால் முறை நமது நாட்டிலேயே முதன் முறையாக பம்பாய் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. எல்லா விதமான கடிதங்களுக்கும் பதிவுத் தபால் கட்டணம் ஒரே அளவில் இருந்தது. எட்டு அணாக்கள் தான் அந்தக் கட்டணம். பின்னர் கல்கத்தாவில் 1851 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1858- இந்தியாவை நிர்வாகம் செய்து வந்த கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டது என விக்டோரியா மகாராணி பிரகடனம் செய்தார்.
  • 1881 – குதிரையால் இழுத்துச் செல்லும்படியான முதல் டிராம் கார், கல்கத்தா டிராம்வேஸ் கம்பெனியால் அறிமுகம் செய்யப்பட்டது. அது ஷியால்டா மற்றும் ஆர்மீனியன் காட் ஆகிய இடங்களுக்கு இடையே ஓடத் தொடங்கியது.
  • 1917 – பிரிட்டனில் நிலக்கரிக்கு ரேஷன் முறை கொண்டு வரப்பட்டது.
  • 1919 – நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை காரணமாக ஜெர்மனியில் 10 நாட்கள் ரெயில்வே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • 1950 – முதல் நீராவி ரெயில் இன்ஜினை சித்தரஞ்சன் ரெயில் இன்ஜின் தொழிற்சாலை தயாரித்து, அதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
  • 1954 – பாண்டிச்சேரி நிர்வாகத்தை பிரெஞ்ச் அரசு இந்திய அரசிடம் ஒப்படைத்தது.
  • 1956 – டெல்லி ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
  • 1967 – வர்த்தக ஒலிபரப்பு என்ற சேவை அகில இந்திய வானொலியால் சோதனை முறையில் ஒலிபரப்பானது. (நவ.11, 1967-இல் விவித்பாரதி வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பமானது)
  • 1973 – மைசூர் மாநிலம் என்ற பெயர் கர்நாடக மாநிலம் என மாற்றப்பட்டது.
  • 1992 – 1000 ஆறு மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை, ஆசியாவிலேயே முதன் முறையாக, ஹரித்வாரில் உள்ள க்ஷழநுடு நிறுவனம் தயாரித்தது.
  • 1994 – சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், வீசிய புயலின் கோர தாண்டவத்தால் 26 பேர் உயிரிழந்தனர்.