தமிழகத்தில் நீதித்துறையில் 162 சிவில் நீதிபதி பணிகள் – டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு

தமிழகத்தில் நீதித்துறையில் 162 சிவில் நீதிபதி பணிகள் – டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு

தமிழக சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 162 நீதிபதி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணியின் விவரம்:

சிவில் ஜட்ஜ் – 162 இடங்கள். (இதில் பொதுப் பிரிவைச் சேர்ந்த பார்வையற்றோருக்கு 2 இடங்களும், எம்பிசியைச் சேர்ந்த காது கேளாதோருக்கு ஒரு இடமும், எலும்பு சார் ஊனமுற்றோருக்கு ஒரு இடமும், எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன)

சம்பளம்:

ரூ.27,700 – 44,770. வயது: 22 முதல் 27க்குள். 26.8.2014 தேதியின் படி வயது வரம்பு கணக்கிடப்படும். கடந்த கல்வியாண்டில் (2013 – 14) சட்டப்படிப்பை முடித்த இளம் பட்டதாரிகளுக்கு வயது வரம்பு சலுகை கிடையாது. ஏற்கனவே சட்டப்படிப்பை முடித்து நீதிமன்றங்களில் வக்கீலாக பணியாற்றி கொண்டிருப்பவர்களுக்கு பொதுபிரிவினர் எனில் 35 வயது வரையிலும், இதர பிரிவினர் எனில் 40 வயது வரையிலும் சலுகை வழங்கப்படும்.

தகுதி:

குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு சட்டப்படிப்பை முடித்து இந்திய பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்திருக்க வேண்டும். பொது பிரிவை சேராதவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.175. இதை செலுத்த வேண்டிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 18.10.2014 மற்றும் 19.10.2014.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.9.2014.