டிசம்பர் 04

டிசம்பர் 04
  • இந்தியா – கடற்படையினர் தினம்
  • தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவரான ந. பிச்சமூர்த்தி மறைந்தார்

இந்தியா – கடற்படையினர் தினம் :

1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின்பொழுது டிசம்பர் நான்காம் தேதி அன்று இந்திய கடற்படை கராச்சி துறைமுகம் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்ரேஷன் ட்ரைடன்ட் (Trident) என்று பெயர். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆப்ரேஷன் பைத்தான் (Python) மூலமாக கராச்சி துறைமுகத்தில், ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்தப் படை நடவடிக்கைகளின் வெற்றியைதான் இந்தியா கடற்படை தினமாக (டிசம்பர் நான்காம் தேதி) கொண்டாடுகிறது.

இந்தப் படை நடவடிக்கைகளுக்கான பணியில் மூன்று வித்யுத் ரக ஏவுகணை படகுகள், ஐஎன்எஸ் நிபட் (கெ86), ஐஎன்எஸ் நிர்கட் (கெ89) மற்றும் ஐஎன்எஸ் வீர் (கெ82) உபயோகப்படுத்தப்பட்டன.

புதுக்கவிதை பிதாமகன்
ந. பிச்சமூர்த்தி:

கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீக்ஷிதர்- காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். பிச்சமூர்த்தி சென்னை சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்றார்.

1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.பிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் படைப்புகள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

படைப்புகள் : சிறுகதை

பதினெட்டாம் பெருக்கு

மோகினி

மாங்காய்தலை

காபூலிக் குழந்தைகள்

விஜயதசமி.

தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி.

எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது…. மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல…. அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல……