டிசம்பர் 01

டிசம்பர் 01
  • 1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர் பிறந்தார்.
  • 1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
  • 1965 – இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
  • 1981 – எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
  • 1990 – விஜயலட்சுமி பண்டிட் காலமானார்.
  • உலக எய்ட்ஸ் நாள்

மேதா பட்கர் :

குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிரான மக்களின் குரலை எதிரொலிக்கும் நிறுவனமான – நர்மதா பச்சாவோ அந்தோலன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.இவர் அணைகளுக்கான உலக ஆணையத்தின் (World Commission on Dams) ஆணையர்.

இவர் பெற்ற விருதுகளாவன :

1991 ஆம் ஆண்டுக்கான ரைட் லைவ்ஃலிஹுட் விருது (Right Livelihood Award) விருது.

1999 ஆம் ஆண்டு விஜில் இந்தியா இயக்கத்தின் எம்.ஏ. தாமஸ் தேசிய மனித உரிமை விருது (M.A. Thomas National Human Rights Award).

பிபிசியின் (BBC) கிரீன் ரிப்பன் விருது (Green Ribbon Award).

பன்னாட்டு மன்னிப்பு அவையின் (Amnesty International) மனித உரிமை காப்பாளர் விருது (Human Rights Defender’s Award).

இவருடைய பெற்றோர்களின் விழிப்புணர்வும் தொண்டும், இவருடைய கொள்கைகளையும், திட்டங்களையும் செதுக்கின என்பது இவரது கருத்து.

நாகலாந்து :

நாகலாந்து டிசம்பர் 1, 1963 ல் ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டது.

ஆட்சிமொழி – ஆங்கிலம்

மாநிலத் தலைநகரம் – கொஹீமா

ஆளுநர் – அஷ்வின்குமார்

முதலமைச்சர் – நைபியு ரியோ.

விஜயலட்சுமி பண்டிட் :

மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி.

ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் (செப்டம்பர் 15, 1953 முதல் செப்டம்பர் 21, 1954) வரை.

1962 முதல் 1964 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநர். 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.

1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இவரது மகள் நயன்தாரா ஒரு நாவலாசிரியர்.

எழுதிய நூல்கள் :

The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness :

A Personal Memoir (1979).

உலக எய்ட்ஸ் நாள் :

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உலக எய்ட்ஸ் நாள் விவாதிக்கப்பட்டது.

இந்தியாவில் எயிட்ஸ் தடுப்பு முயற்சிகள் :

யுவா என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

யுவா என்பது Youth Unite for Victory on Aids என்பதன் சுருக்கமாகும்.

அதாவது எயிட்ஸ்-ஐ வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம். இத்திட்டம் 27.06.2006-இல் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, நேரு யுவ கேந்த்ரா, சாரணர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தன்னார்வத் தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.

தமிழ்நாட்டில் எயிட்ஸ் தடுப்பு முயற்சிகள் :

2005 – 06 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிதி ஆதரவில் ரெட் ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.