ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு

ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு பின், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்., – ஐ.ஐ.எஸ்., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வை, இரண்டு கட்டமாக எழுத வேண்டும்.

முதல் கட்டமாக, பிரதானத் தேர்வையும், பின், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வையும் எழுத வேண்டும். இந்த தேர்வுகளில் பெறும் மதிப்பெண் மற்றும் தர வரிசைப்படி, உயர்கல்வி நிறுவனங்களில், ஆன் – லைன் கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கும். ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, 2016 மே, 22ல் நடக்கும் என, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தற்போது, ஜே.இ.இ., பிரதானத் தேர்வு, தேர்வு மையங்களில், ஏப்ரல், 3ம் தேதியும், ஆன்-லைனில், ஏப்., 9 மற்றும், 10ம் தேதியும் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆன்-லைனில் மட்டும் விண்ணப்பப் பதிவு, டிச., 1ம் தேதி துவங்கி, 31ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, http:/www.jeemain.nic.in/ இணையதளத்தில் அறியலாம்.