உயர்கல்வி மேற்கொள்வோருக்கான இன்டர்ன்ஷிப் திட்டம் அறிமுகம்!

உயர்கல்வி மேற்கொள்வோருக்கான இன்டர்ன்ஷிப் திட்டம் அறிமுகம்!

இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் இந்திய மாணவர்களுக்கு, பல்வேறு அரசுத் துறைகளில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்வதற்கான திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்கு MHRD Internship Scheme – 2014 என்று பெயர். கல்வி, சமூக அறிவியல், அறிவியல், மானுடவியல், மேலாண்மை, பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் இளநிலை அல்லது முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு வருவோர், இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தின் முதல் batch, வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. முதல் batch -ல், வெறும் 6 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள், மனிதவள அமைச்சகத்துடன் 2 மாதங்கள், நெருங்கி பணியாற்றும் வாய்ப்பினை பெறுகிறார்கள் மற்றும் அந்த காலகட்டத்தில், அவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.

இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பங்கேற்பதன் மூலமாக, கொள்கை உருவாக்குதலில் மாணவர்கள் பங்கேற்க முடிவதோடு, பல்வேறான திட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x