இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம்

பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும்

ஆய்க்கனோமியா (oikonomia) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட எக்னாமிக்ஸ் என்ற சொல்லுக்கு வீட்டு நிர்வாகம் என்பது பொருள்.

பொருளியலின் தந்தையென போற்றப்படும் ஆடம்ஸ்மித் அவர்களின் நாடுகளின் செல்வம்” என்ற நூல் வெளியிடப்படும் வரை அரசியலின் ஒரு பிரிவாக மட்டுமே பொருளியல் கருதப்பட்டு வந்தது. ஆடம்ஸ்மித்தின் கருத்துப்படி செல்வத்தைப் பற்றிய அறிவியலே பொருளாதாரம் ஆகும்.

ஆல்பிரட் மார்ஷல் (ஆடம்ஸ்மித்தின் மாணவர்) அவர்களின் கருத்துப்படி சாதாரண மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்கள் பற்றிய அறிவியலே பொருளாதாரமாகும்.

மனிதனால் பணம் சிறப்பும் பெருமையும் பெறுகிறதே தவிர, பணத்தினால் மனிதன் சிறப்பும் பெருமையும் பெறுவதில்லை என்பது மார்ஷலின் கருத்து.

மார்ஷலின் இலக்கணம் பொருளாதாரத்தை ’நலம் சார் அறிவியல் என்று போற்றுகிறது.
மார்ஷலின் பொருளியல் விதிகளை நிபந்தனை சார் விதிகள் என்றும் போக்குரைக் கூற்றுகள் என்றும் கூறுவர்.

பொருளாதாரம் சமூக இயல்களில் முதன்மை பெற்ற இயல் என்பதால் அது சமூக இயல்களின் அரசியாக கருதப்படுகிறது.

பொருளியல் விதிகள் தொடர்ந்து மாறும் தன்மையுடையவை. பொருளியல் விதிகள் சோதனை மூலம் மெய்ப்பித்து காட்ட இயலாது. நிபந்தனைக்கு உட்பட்டவை. எல்லா சூழலுக்கும் பொருந்தக் கூடியவை அல்ல, இவை அனைத்தும் பொருளாதாரத்தின் குறைபாடுகள் அல்ல, இயல்புகள் ஆகும்.

பொருளாதாரச் சிந்தனை வரலாறு

ஹீப்ரோஸ்

உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்டிருந்தவர்கள் ஹீப்ரோஸ் எனப்படுவோர் ஆவர்.

ஹீப்ரோஸ் நாகரிகம் கி.மு.2500க்கு முற்பட்ட காலகட்டத்தைச் சார்ந்தது.

இவர்களின் பொருளாதாரச் சிந்தனையில் அரசியல், சமூகம், இறைநம்பிக்கை, வேதாந்தம் சார்ந்த அனைத்துத் துறைக் கருத்துகளும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளன. தனி மனிதனுக்கோ பொருள் சார்ந்த சிறப்பிடம் தரப்படவில்லை.

தன்னம்பிக்கைக்கும் நேர்மைக்கும் சிறப்பிடம் வழங்கப்பட்டது. உழைப்பின் சிறப்பிடம் உணரப்பட்டது. வேளாண்மை சார்ந்த உழைப்பு மதிக்கப்பட்டது. வேளாண்மையைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு மிகையான உணவு கிடைக்கும் என்பது அவர்களின் வாதம்.

மக்கள் நாட்டுப்பற்று மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்பதற்காகவும் 50-ஆம் ஆண்டு ஜூப்ளி ஆண்டுத் திட்டம் பின்பற்றப்பட்டது. ’சபாத் என்பது அவர்களின் வாராந்திர விடுமுறை நாள் ஆகும். அன்று முதலாளி, தொழிலாளி, அடிமைகள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஓய்வும், மகிழ்ச்சியும் நிறைந்த நல்ல நாளாக அது கொண்டாடப்பட்டது.

ஹீப்ரோஸின் கருத்துகள் மிகப் பழமையானவை. ஆனால் அது என்றைக்கும் மனித இனத்திற்கு நன்மை தரக் கூடியவையாக உள்ளன.

வணிக வாதம்

15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்களால் பின்பற்றப்பட்ட பொருளாதார கருத்துகளும் கொள்கைகளும் வணிக வாதம் எனப்பட்டன.

அவர்களுடைய கொள்கைகளின்இயல்புகள்பின்வருமாறு :

  • வணிக வாதத்தின்சிறப்பான நோக்கம்வலுவான, நிலையான அரசை உருவாக்குதல்.
  • தனிமனிதனை விட அரசுக்கு சிறப்பிடம்வழங்குதல்.
  • விலை மதிப்பற்ற உலோகங்களின்கையிருப்பை உயர்த்துதல். ஏற்றுமதியின்மதிப்பைக்கூட்டி இறக்குமதியின்மதிப்பைக்குறைத்தல்.
  • அந்நியச்செலாவணியின்நிலையைச்சாதகமாக இருக்கச்செய்தல்.
  • தொழில்துறை உற்பத்தியை விட வணிகம்தான்சிறந்தது என்று கருதுதல்- வேளாண்மையைப்புறக்கணித்தல்.
  • அரசின்பொருளாதாரக்கொள்கைகள்திறமையாக நிர்வகிக்கப்பட வேண்டுமானால் அரசின்தலையீடு கட்டாயத்தேவை என உணர்தல்.
  • பணத்திற்குச்சிறப்பிடம்அளித்தல், சேமிப்பை வலியுறுத்தல்.
  • வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி வீதம்வழங்குதல், தேவை என உணர்தல்
  • அந்நியச்செலாவணி நிலையில்இசைவு நிலையைப்பெறத் தற்காப்புக் கொள்கையைப் பின்பற்றுதல்.
  • நாட்டின்மக்கள்தொகையைப்பெருக்கிஅதன்மூலம்தேவையான உழைப்பாளிகளைப் பெறும் நோக்கத்தோடு திருமணம், பெற்றோர்கள்ஆகிய கருத்துகளை வலியுறுத்தல். இவ்வாறாக வணிகம், வலுவான அரசு, சுமுகமான சூழல்ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

இயற்கை வாதம்

1756 முதல்1778 வரை பிரான்ஸ்நாட்டில்உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் இயற்கை வாதம்எனப்பட்டன. இயற்கை வாதம் என்றால் இயற்கையின் விதி என்று பொருள். அவர்களது கொள்கைகள் பின்வருமாறு :

  • இயற்கையின்விதிஎங்கு பின்பற்றப்படுகிறதோ அங்கு சிறந்த நன்மை தரக்கூடிய சமுதாயம் உருவாகும்.
  • சமதர்மத்தில்அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மாறாக சொத்துரிமை, பாதுகாப்புஉரிமை ஆகியவை அவர்களின்சமுதாய நடவடிக்கைகளாக அமைந்தன.
  • எங்கு மனிதன்முழுத்தன்னுரிமையுடன்இருக்க முடியுமோ அங்குதான் அதிக அளவுநன்மையும் மகிழ்ச்சியும்பெற முடியும்என நம்பினார்கள். எனவே அரசின் தலையிடாக் கொள்கை பின்பற்றப்பட்டது
  • இவர்களின்கருத்துப்படி தொழில்துறையும்வணிகமும்ஏற்கெனவே உள்ளதை மறு உற்பத்திசெய்கின்றனவே தவிர உபரிப்பண்டங்களை உற்பத்திசெய்ய இயலாது.மாறாக வேளாண்துறையில்மட்டும்தான்நுகர்ச்சிக்கு அதிகமான பண்டங்களை உற்பத்திசெய்ய முடியும். மனிதன்படைப்பவன்அல்லன். எனவே வேளாண்மை தவிர பிற துறைகளில் ஈடுபடுத்தப்படும் உழைப்புபயனற்றது எனக்கருதப்பட்டது.
  • சமுதாயத்தை உழைக்கும்பிரிவு, முதலாளிப்பிரிவு, பயனற்ற பிரிவுஎன மூன்றாக பிரித்து வருமானம்இந்த மூன்று பிரிவுகளுக்குள் சுழல்வதாகக்கருதப்பட்டது.
  • பயன்பாட்டு மதிப்பிற்கும்மாற்று மதிப்பிற்கும்வேறுபாடு உணரப்பட்டது.
  • தனிமனிதனின்சொத்துரிமை உயர்ந்த நிறுவனமாக மதிக்கப்பட்டது.
  • தடையில்லா வணிகம்ஆதரிக்கப்பட்டது.
  • அரசின்தலையீடு மிகக்குறைந்த அளவில்இருக்க வேண்டுமெனக்கருதப்பட்டது.
  • நேர்முக வரிகள், மறைமுக வரிகளை விடச்சிறந்தவை என்பதை உணர்த்தியவர்கள் இயற்கை வாதத்தினர்ஆவார்.
  • பொருளாதார முன்னேற்றத்துக்கும்வளர்ச்சிக்கும்மூலதனத்தின்சிறப்பான பங்கு உணரப்பட்டது.

மேலே விளக்கப்ட்ட ஹீப்ரோஸ், வணிக வாதம், இயற்கை வாதம்ஆகிய பொருளியல் சிந்தனைகளிலிருந்து பின்-வருவனவற்றை உணர முடிகிறது.

ஹீப்ரோஸ்நாகரிகத்தில்இறைநம்பிக்கைக்கும்மனச்சான்றுக்கும்சிறப்பிடம்அளிக்கப்பட்டது.

வணிக வாதத்தினர் வணிகத்தைப் பெரிதும் ஆதரித்தனர்.

இயற்கை வாதத்தினர்வேளாண்மைக்கு சிறப்பிடம்கொடுத்தனர். அதோடு நாட்டின்வளர்ச்சிக்கு வணிகமும்தேவை எனக்கருதப்பட்டது. தடையில்லா வணிகக்கொள்கை, சொத்துரிமை, வரிக்கொள்கைகள் மூலதனத்தின் சிறப்பிடம் ஆகியவற்றை அவர்கள் அறிந்ததால் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியும்முன்னேற்றமும்

பொருளாதார வளர்ச்சிஎன்பது வளர்ச்சியை மட்டுமே குறிக்கும்.

பொருளாதார முன்னேற்றம்என்பது நிறுவன அடிப்படை மாற்றங்களோடு கூடிய வளர்ச்சியை உள்ளடக்கியதாகும்.

C.B.கிண்டில்பர்கர்:இவரது கருத்துப்படி பொருளாதார வளர்ச்சிஎன்பது அதிக உற்பத்தியைக்குறிக்கும்.

பொருளாதார முன்னேற்றம்என்பது அதிக உற்பத்தியையும், அதை செய்வதற்குத்தேவையான தொழில்நுட்ப நிறுவன ஏற்பாடுகளின்மாற்றத்தையும்முன்னேற்றங்களையும்குறிப்பதாகும்.

வளர்ச்சிஎன்பது அதிக உற்பத்தியை மட்டும்குறிக்கும். ஆனால்உற்பத்திமுறைகளைப்பற்றிஅறிய முற்படாது. மாறாக முன்னேற்றம்என்பது அதிக உற்பத்தியோடு அந்த உற்பத்திக்கான காரணங்களையும்விளக்கும்.பேராசிரியர்ஜே.ஏ.சும்பீட்டர்:இவரது கருத்துப்படி முன்னேற்றம்என்பது தன்னிச்சையான தொடர்பற்ற மாற்றங்களைக்குறிக்கும்.

இம்மாற்றங்கள்காரணமாகச்சமநிலை பாதிக்கப்படும். ஆனால்வளர்ச்சிஎன்பது படிப்படியாக நிலையான நீண்டகால மாறுதல்களை மட்டும்குறிக்கும். மக்களின்சேமிப்புஅதிகரிப்புஅல்லது மக்கள்தொகை பெருக்கம்ஆகியவற்றால்இம்மாறுதல்கள்நிகழ்கின்றன. இக்கருத்துப்படி பொருளாதார அமைப்புமாறாத சமநிலையில்இருப்பதாகக்கருதப்படுகிறது.

முன்னேற்றத்திற்குத்தேவையான முதலீடு, சேமிப்பு, வருவாய், செலவினம், தேவை, அளிப்புஆகிய பல்ேவறு காரணிகளும்சம நிலையில்இருப்பதாகவும்கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின்வல்லுநர்குழுவின்பரிந்துரைப்படி முன்னேற்றம்என்பது மனிதனின்பொருள்சார்ந்த தேவைகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவனுடைய சமுதாய நிலை மேம்பாடுகளையும் எடுத்துக்கொள்கிறது. எனவே முன்னேற்றம் என்பது வளர்ச்சியும் மாறுதல்களும்சேர்ந்ததாகும். இந்த மாறுதல்கள் சமுதாய, பண்பாட்டு, பொருளாதார, நிறுவன அனைத்து மாறுதல்களையும் குறிக்கும். இந்த விளக்கம் முழுமையான விரிவான விளக்கமாக அமைந்துள்ளது. பொருளாதார மாற்றங்களோடு பல்வேறு வகையான மாற்றங்களையும் இக்கோட்பாடு எடுத்துக்கொள்கிறது. மேலும்வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் காரணிகளோடு அவற்றின் தரத்தையும் வலியுறுத்துகிறது.

மேற்கூறியவற்றிலிருந்து முன்னேற்றம் என்பது வளர்ச்சியின் அளவு, தரம் ஆகிய இரண்டையும் குறிக்கும். ஆனால் வளர்ச்சி என்பது அளவை மட்டும் கருத்தில் கொள்ளும் என்பது தெளிவாகிறது.

பின்தங்கிய நாடுகளின் சிறப்பியல்புகள்: பேராசிரியர் கெயின் கிராஸ் என்பவர் உலகப் பொருளாதார அமைப்புகளின் குப்பைமேடுதான் ’பின்தங்கிய நாடுகள் என்கிறார்.

பின்தங்கிய நாடுகளில் காணப்படும் பண்புகள் பின்வருமாறு:

1.குறைந்த தலா வருமானம்

  • பேராசிரியர்குரிஹாரா என்பவர்வளர்ச்சிகுன்றிய நாடுகளின்அடிப்படை ’இயல்பு குறைந்த தலா வருமானம்என்கிறார்.
  • உலக மக்களில்77%(விழுக்காட்டினர்) பின்தங்கிய நாடுகளிலும்23%(விழுக்காட்டினர்) வளர்ச்சியடைந்த நாடுகளிலும்வாழ்கின்றனர்.
  • மொத்த உற்பத்தியில்19%மட்டுமே பின்தங்கிய நாடுகள்பெற்றுள்ளன.
  • பின்தங்கிய நாடுகளின்தலா வருமானம்சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டாலராக உள்ளது. ஆனால்வளர்ச்சியடைந்த நாடுகளில்தலா வருமானம்சராசரியாக ஒரு நாளைக்கு முப்பது டாலராக உள்ளது. அதாவது பதினைந்து மடங்கு அதிகம்.

2.வறுமை நச்சுச்சூழல்

பின்தங்கிய நாடுகளில்சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டு பொருளாதாரத்தைப் பின்தங்கிய நிலையிலேயே வைத்து விடுகின்றன. சுழன்று வரும்வறுமையை மேயர் என்பவரும், பால்டுவின் என்பவரும் பின்வருமாறு கூறுகின்றனர்.

3.வேளாண்துறை முதன்மைத்துறையாக இருத்தல்

  • சராசரியாக 70%முதல்75%வரை மக்கள்வேளாண்மையை முதன்மை தொழிலாகக் கொண்டிருப்பார்கள். வளர்ச்சியடைந்த நாடுகளில் 3% முதல் 4% வரையில் மக்கள் வேளாண்மையை சார்ந்துள்ளனர்.
  • 60%நில உரிமை அளவுகள்2.5 முதல்5 ஏக்கருக்குள்இருப்பதால், புதிய முறைகளை பயன்படுத்த இயலாமல்இலாபமற்ற நிலை காணப்படும்.
  • மக்கள்தொகை பெருக்கத்தினால் மக்கள் நிலத்தைச் சார்ந்து வாழும் நிலை அதிகரிக்கிறது.
  • திட்டக்காலத்தில் நாம் பெற்ற வளர்ச்சி காரணமாக தற்போது வேளாண்மையைச் சார்ந்து வாழும்மக்கள்தொகை 75% லிருந்து 68% ஆக குறைந்துள்ளது. நாட்டு வருமானத்தில் வேளாண்மையின் பங்கு 50% லிருந்து 37% ஆக குறைந்துள்ளது.

4.தொழில்துறையில்பின்தங்கிய நிலை

தொழில்துறையைப்பொறுத்தவரையில்மெதுவான வளர்ச்சிமட்டுமல்ல, சமச்சீரான வளர்ச்சியும்இல்லை. மொத்த மக்கள் தொகையில் 15% மட்டும் தொழில் துறையில் ஈடுபடுகிறார்கள். மூலதனப் பொருள்களின் உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கும். இருக்கும் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப் படவில்லை.

5.மக்கள்தொகை அழுத்தம்

வளர்ந்த நாடுகளின் சராசரி மக்கட் தொகை வளர்ச்சிவீதம் 0.6% பின்தங்கிய நாடுகளின் மக்கட் தொகை வளர்ச்சி 2.1% ஆகும். மேலும்பிறப்பின் அளவு 1000 பேருக்கு 30 முதல் 40 வரையிலும், இறப்பின் அளவு1000 பேருக்கு 9 முதல் 10 வரையிலும் உள்ளது. குறைந்த வருவாய், குறைந்த நுகர்ச்சி, குறைந்த சேமிப்புபோன்ற பல பொருளாதார சிக்கல்களை இந்த அதிக மக்கள்தொகை ஏற்படுத்துவதுடன்நாட்டின்பொருளாதார வளர்ச்சியும் குறைகிறது.

6.பரவலான வேலையின்மை மற்றும்குறை வேலையுடைமை

  • ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் அறிக்கையின்படி பின்தங்கிய ஆசிய நாடுகளில் 20% முதல் 25% வரை மக்கள் மறைமுக வேலை இல்லாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவைப் பொறுத்தவரையில் வேளாண்மையைச் சார்ந்திருப்பவர்கள் ஓர் ஆண்டில் 200 நாள்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்.
  • டோதாராவின் கருத்துப்படி நாட்டுப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வேலையில்லாதவர்கள், பகுதிநேர வேலையில் உள்ளவர்கள் ஆகியோரைப் கணக்கிட்டால் மூன்றாம் உலக நாடுகளில் 30% மக்கள்முழுமையாக பயன்படுத்தப்படாமல்உள்ளனர்.

7.நிர்வாகத்திறன்குறைவு
ஆக்க காரணிகளை உற்பத்தியில்ஒருங்கிணைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் மேலாண்மைத்திறன் அல்லது நிர்வாகத்திறன் மிகவும் குறைவாக உள்ளது.

8.போதிய அடிப்படை கட்டமைப்புவசதியின்மை

பொருளாதார வசதியை ஊக்குவிக்கத்தேவைப்படும்போக்குவரத்து, மின்உற்பத்திஆகியன குறைவாகவே உள்ளன.

9.குறைந்த மூலதனம்

வருவாய்குறைவாக இருப்பதால்சேமிப்புகுறைவாக உள்ளது. எனவே முதலீடு குறைந்து வளர்ச்சியின்வேகம்குறைகிறது.

10.தொழில்நுட்பம்பின்தங்கிய நிலை

போதுமான மூலதனம்இருந்தால்தான்மக்களுக்குத்தேவையான தொழில் நுட்ப பயிற்சியளிக்க முடியும். ஆனால் குறைவான மூலதனத்தின் காரணமாக தொழில்நுட்பமும்அது தொடர்பான பயிற்சிகளும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

11.மக்களின்பின்தங்கிய பொருளாதார நிலை

மக்களின்செயல்திறன்குறைவாக உள்ளது. ஏனெனில்வறுமை காரணமாக சத்தான உணவுஇல்லாமை, கல்வியறிவுஇல்லாமை, உடல்நலக்குறைவு, போதுமான பயிற்சிஇல்லாமை, இடம்பெயர விருப்பமில்லாத நிலை, சமூகப்பொருளாதார காரணிகளால்தேவையான ஊக்கமின்மை ஆகிய பல்வேறு காரணங்களால்செயல்திறன்குறைகிறது.

12.இரட்டைத்தன்மை

நகர்ப்புறங்கள் மாறுதலையும் முன்னேற்றத்தையும் விரும்பும். ஆனால் நாட்டுப்புறங்கள் தேக்க நிலையில் உள்ளன. இது பின்தங்கிய நாடுகளில் பொதுவாக காணப்படக்கூடிய இரட்டைத் தன்மையாகும்.

13.முழுமையாகப்பயன்படுத்தப்படாத இயற்கை வளங்கள்

இயற்கை வளங்களான நிலம், நீர், காடுகளின் வளங்கள், கனிம வளங்கள், மின்உற்பத்திக்குத் தேவைப்படும் வளங்கள் பற்றாக் குறையாக இல்லை. மாறாக அவை முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மக்களின் பிற்போக்கான எண்ணங்களும், தொழில்நுட்ப அறிவின்மையுமே இதற்கு காரணம்.

14.குறைந்த உற்பத்தித்திறன்

குறைந்த தலா வருமானம் காரணமாகப் பெரும்பாலான மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக உள்ளனர். சத்தான உணவு கிடைப்பதில்லை. இயந்திரங்கள் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே நிர்வாகத் திறமையோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாத காரணத்தால் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது.

15.சமூக முதலீடுகள்இல்லாமை

மனித வள மேம்பாட்டிற்கான முதலீடுகள் குறைவாக உள்ளதால் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்உற்பத்தி, தொழிற்கல்விக்குத் தேவையான வசதிகள், வசதியான வீடுகள், மருத்துவ வசதிஆகிய அனைத்துமே போதுமான அளவில்இல்லை.

16.பொருளாதார முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு

உலக வங்கியின் அறிக்கையின்படி பின்தங்கிய நாடுகளில் பண்டங்கள், உலோகங்கள், எரிபொருள்கள், கனிமவளங்கள் ஆகியவை பற்றாக்குறையாக உள்ளன. எரிபொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள், வெளிநாட்டு மூலதனம், தொழில்நுட்பம், சில சமயம் உணவு பண்டங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதி மூலம்பெறும் அயல்நாட்டு செலாவணி வருவாய் குறைவாக உள்ளதால் இறக்குமதிக்குச் செலுத்த வேண்டிய தொகை குறைகிறது. ஆகையால் அயல்நாட்டுச் செலுத்து நிலை எப்போதும் பாதகமாக உள்ளது. அதன் காரணமாக எப்ேபாதும்அயல்நாடுகளிலிருந்து கடன் தேவைப்படுகிறது.

17.தொடர்ச்சியான உள்நாட்டு, வெளிநாட்டு கடன்சுமை

பின்தங்கிய நாடுகளின் வருமானத்தில் பெரும் பகுதி வட்டி செலுத்தவும், ஊதியம், ஓய்வூதியம் ஆகியவை வழங்கவும் செலவிடப்படுகிறது. மேலும் ஏற்றுமதித்திறன் குறைவாகவும் இறக்குமதித் தேவை அதிகமாகவும் இருப்பதால் கடன்சுமை தொடர்ந்து கூடுகிறது.

18.பாதகமான நிறுவன அமைப்புமுறை

  • குன்னார்மிர்தால் அவர்கள் கருத்துப்படி பின்தங்கிய நாட்டு மக்களின் பழமை வாதங்களும் மூடப்பழக்க வழக்கங்களும் முற்போக்கு சிந்தனை இல்லாமல்செய்து விடுகின்றன. எனவே மாறிவரும்தேவைக்கேற்ப சமூக பொருளாதார சூழலை உருவாக்குவதில்பின்தங்கிய நிலை காணப்படுகிறது.
  • இந்தியா விடுதலை பெற்ற போது ஏறக்குறைய மேற்கூறிய அத்தனை இயல்புகளையும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x