அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுவிப்பாளர் பணி: டிஆர்பி அறிவிப்பு

அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுவிப்பாளர் பணி: டிஆர்பி அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer Instructor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பரம் எண்: 07/2014

நிறுவனம்: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்.

மொத்த காலியிடங்கள்: 652

பணி: Computer Instructor

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4600

வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 56க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: BE, B.Sc (கம்ப்யூட்டர் சயின்ஸ்), BCA, B.Sc (தகவல் தொழில்நுட்பம்) உடன் பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/Comp%20Instructor%202014/13102014/Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.