நவம்பர் 15

நவம்பர் 15
  • 1913 – ரவீந்திர நாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கீதாஞ்சலி என்ற அவரது கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆசியாவிலேயே முதன்முதலாக நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை இவர் அடைந்தார்.
  • 1948 – மூன்றாம் வகுப்பு பெட்டிகளை மட்டுமே கொண்ட ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில், டில்லி-பாட்னாவுக்கு இடையே ஓடத் தொடங்கியது.
  • 1949 – மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்ஸேயும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆப்தேவும், அம்பாலாவில் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1969 – வியட்நாம் போரை எதிர்த்து வாஷிங்டனில் 2,50,000 பேர்களுக்கும் மேல் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • 1978 – ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு விமானம் கொழும்பு அருகே விழுந்து நொறுங்கியதில் 189 பயணியர் உயிரிழந்தனர்.
  • 1982 – பூதான இயக்கத்தின் தலைவர் ஆச்சார்யா வினோபா பாவே, வார்தா (மஹாராஷ்டிரா) வில் காலமானார்.