நவம்பர் 02

நவம்பர் 02
  • 1920 – அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் என்னுமிடத்தில் முதன்முதலாக ரேடியோ ஒலிபரப்பு ஆரம்பமானது.
  • 1924 – பிரிட்டனில் முதன்முதலாக ’சன்டே எக்ஸ்பிரஸ் என்ற செய்தித்தாளில் குறுக்கெழுத்துப் போட்டி அறிமுகமானது.
  • 1936 – லண்டனில் முதன்முதலாக தொலைக்காட்சி ஒளிபரப்பு பி.பி.சி நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது.
  • அப்போது மொத்தம் 100 தொலைக்காட்சி பெட்டிகளே பிரிட்டனில் இருந்தன.
  • 1948 – ’சிகாகோ டெய்லி டிரிப்யூன் என்ற செய்தித்தாளில் முதல் பக்க தலைப்பு செய்தியாக, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ’’டிவே, ட்ருமனைத் தோற்கடித்தார் என்ற தவறான தகவல் வெளியானது. உண்மையில், டிவே தோற்றுப்போய், ட்ருமன் ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருந்தார்.
  • 1950 – பிரபல நாடக ஆசிரியர், விமர்சகர் ஜார்ஜ் பெர்னாட் ஷா, 94 வது வயதில் பிரிட்டனில் காலமானார்.
  • 1969 – ஜனாதிபதி தேர்தலுக்கு சஞ்சீவ ரெட்டியை காங்கிரஸ் கட்சியின் தலைமை நிறுத்தியது. இந்திரா காந்தி அதை ஏற்காமல், போட்டி வேட்பாளராக வி.வி.கிரியை நிற்கச் செய்து வெற்றி பெறச் செய்தார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளந்தது.
  • 1971 – செல்வி ஜெ.ஜெயலலிதாவின் தாயார் சந்தியா காலமானார்.