டிசம்பர் 11

டிசம்பர் 11
  • 1946 – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.
  • 1882 – மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்தார்.
  • 2004 – கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ் சுப்புலட்சுமி மறைந்தார்.

சுப்பிரமணிய பாரதி :

சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட சுப்பிரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 இல் சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்தார்.

இவருடைய கவித்திறனை வியந்து பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்க மன்னரால் எட்டயபுரம் அரசசபையில் வழங்கப்பட்டது.

பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளமொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் சிலகாலம் பணியாற்றியுள்ளார்.

தேசியக்கவி :

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாக போற்றப்படுகிறார்.

புதுக்கவிதைப் புலவன் :

பாமரரும் கேட்டுணரும் வசனக்கவிதையைத் தமிழுக்குத் தந்தவர்.

கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்.

பெண்ணுரிமைப் போராளி :

பெண்ணடிமை தீருமட்டும் இத் திருநாட்டில் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினர். “போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகாண்” என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார்.

பத்திரிகைப் பணி :

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரையிலும் பணியாற்றினார்.

சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும்,

இந்தியா என்ற வார இதழிலும்,

சூரியோதயம் (1910),

கர்மயோகி (திசம்பர் 1909-1910),

தர்மம் (பிப் 1910),

பாலபாரதா என்ற இதழ்களிலும் அவர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கியப்பணி

குயில்பாட்டு

கண்ணன் பாட்டு

பாஞ்சாலி சபதம்

புதிய ஆத்திச் சூடி

சுயசரிதை

பாரதி அறுபத்தாறு

ஞானப் பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

விடுதலைப் பாடல்கள்

சந்திரிகையின் கதை ஆகியன அவர் படைப்புகளில் சில.

எம்.எஸ். சுப்புலட்சுமி : (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி)

பிறப்பு : 16 செப்டம்பர் 1919

இறப்பு : 11 டிசம்பர் 2004

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாவார். இசைக்கலைஞர் சுப்பிரமணிய அய்யர்- மதுரை சண்முகவடிவு அம்மாளுக்கு மகளாகப் பிறந்தார்.

விருதுகள் :

பத்ம பூஷண் – 1954

சங்கீத கலாநிதி – 1968

இசைப் பேரறிஞர் விருது – 1970

மக்சேசே பரிசு – 1974

பத்ம விபூஷண் – 1975

காளிதாச சன்மான் – 1988

நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது – 1990

பாரத ரத்னா – 1998

ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார்.