ஜூன் 17 ல் மருத்துவ தரவரிசை பட்டியல்

ஜூன் 17 ல் மருத்துவ தரவரிசை பட்டியல்

சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் கமலா, மருத்துவ படிப்புக்களுக்கான விண்ணப்பங்களை நாளை முதல் ஜூன் 6 ம் தேதி மாலை வரை ஆன்லைனில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் 7 ம் தேதி மாலை வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும். ஜூன் 17 ம் தேதி மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 20ல் முதல் கட்ட கவுன்சிலிங்கும், ஜூலை 18 ல் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.