TNPSC Group 4 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் வெளியீடு.

TNPSC Group 4 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் வெளியீடு.

சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் 7382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24ல் நடைபெற உள்ள நிலையில் இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி சார்பில் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு ஒவ்வொரு பணிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பதவிக்கு ஏற்க தனித்தனியாக தேர்வுகள் நடைபெறும். டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். சமீபத்தில் குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது

இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்து தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.

இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று (வியாழக்கிழமை) டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in இணையதளம் சென்று ஹால்டிக்கெட் பதிவிறக்கி கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.