இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • வாக்காளர் பட்டியல் தயாரித்தல்.
  • வாக்காளர் பட்டியலை திருத்துதல்.
  • தொகுதிக்கான இடங்களை ஒதுக்கீடு செய்தல்.
  • தேர்தல் நடத்துதல்.
  • தேர்தலை மேற்பார்வையிட்டு வழிகாட்டு வதுடன் அது தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கட்டுப்படுத்துதல்.
  • அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளித்தல்.
  • கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்தல்.
  • சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்தல்.
  • தேர்தல் விவகாரங்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் குடியரசுத்தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர்களுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்குதல்.
  • நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியிழப்பினை முடிவு செய்தல்.
  • இந்திய குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரால் பரிசீலனைக்கு அனுப்பப்படும் மனுக்கள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்த்தல்.
  • ஓர் அரசியல் கட்சியில் பிளவு ஏற்பட்டால் எழும் தேர்தல் சின்னம் தொடர்பான சச்சரவுகளில் முடிவெடுத்தல்.
  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களின் உச்சவரம்பினை இறுதி செய்யும் அதிகாரம்.
  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவணப் பத்திரங்களை கேட்டுப் பெறும் பணி.
  • தேர்தல் செலவினக் கணக்கினை ஓர் வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லையெனில் அவரை தகுதியிழப்பு செய்யும் அதிகாரமும், கடமையும்.
  • தேர்தல் முடிந்த பின்னர் முறைப்படி அவை அமைக்கப்பட்டதற்கான அறிவிப்பினை வெளியிடுதல்.
  • தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள்
  • தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO)
  • மாவட்ட தேர்தல் அதிகாரி (DEO)
  • தேர்தல் நடத்தும் அலுவலர் (RO)
  • வாக்காளர் பதிவு அலுவலர் (ERO)
  • வாக்குச் சாவடி தலைமை அலுவலர் (PO)
  • தேர்தல் பார்வையாளர்கள் (EO)