
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 7 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
பொறியியல் படிப்புக்கான ஜெ.இ.இ. மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன. இதேபோல மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவு தேர்வு மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.