ஜார்க்கண்ட்
மாநிலம் சாஹிப்கஞ்சில் கங்கை நதிக்கரையில் சரக்குப் பெட்டகங்களை எடுத்துச் செல்வதற்கான
புதிய முனையத்தை பிரதமர் மோடி 2019 செப்டம்பர் 12 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம்
வடகிழக்கு மாநிலங்களிலும், வங்கதேசம், நேபாளத்துக்கும் எளிதில் வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக்
கொள்ள முடியும்.
நாடு
முழுவதும் அமைக்கப்படவுள்ள 462 ஏகலைவன் மாதிரிப் பள்ளிகளுக்கு பிரதமர் மோடி 2019 செப்டம்பர்
12 அன்று அடிக்கல் நாட்டினார். அவற்றில் 69 பள்ளிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்படவிருப்பது
குறிப்பிடத்தக்கது.
ஐ.நா.
பொதுச் சபையில் பிரதமர் மோடி 2019 செப்டம்பர் 27 அன்று உரையாற்றவுள்ளார். மோடி 2-ஆவது
முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஐ.நா. பொதுச் சபையில் முதல் முறையாக உரையாற்றவுள்ளார்.
மேலும், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஐ.நா. தலைமையகத்தில்
உள்ள பொருளாதார, சமூக கவுன்சில் அரங்கில் ‘‘தலைமைப் பண்பு விவகாரங்கள் :
சமகால
உலகுக்கும் தேவைாயனவர் காந்தி என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார்.
ராஜஸ்தான்
வங்கியுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பங்குச்சந்தைக்கு தாமதமாகத் தெரிவித்ததற்காக ஐசிஐசிஐ
வங்கிக்கு இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் (செபி) ‘12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்தியா
சர்வதேசத் தரத்திலான, குண்டு துளைக்காத கவச உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்)
100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதாக இந்திய தரச்சான்று
அமைப்பான பி.ஐ.எஸ். தெரிவித்துள்ளது.
நாட்டின்
இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்கு, உலக குத்துச்சண்டை சாம்பியன் மேரி
கோம், பாட்மிண்டன் உலக சாம்பியனான பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் உள்ளிட்ட
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
பூமியைப்போலவே
தட்பவெப்ப நிலையைக் கொண்ட மற்றொரு கிரகமான கே2 – 18பி-யில் நீர் இருப்பதை ஐரோப்பிய
விண்வெளி ஆய்வு மையம் மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கல
தொலைநோக்கிகள் கண்டறிந்துள்ளன.
அட்லாண்டிக்
பெருங்கடல் அமைந்துள்ள பஹாமாஸ் தீவை 2019 செப்டம்பர் 1 அன்று ‘டோரியன் எனும் புயல்
கடுமையாகத் தாக்கியது. இப்புயலுக்குப் பிறகு அங்கு 2,500 பேர் காணாமல் போயுள்ளதாகப்
பதிவு செய்யப்பட்டுள்ளது.