Current Affairs Events – TNPSC competitive exam study materials

 

 • நாடுமுழுவதும் திரையரங்குகளில் திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதத்தினைக் கட்டயமாக இசைக்க வேண்டும் எனவும் மரியாதை செலுத்த வேண்டும் எனவும் 2016 நவம்பர் 30 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • மத்திய சுகாதாரத்துறையின் சார்பில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) நடத்திய ஏழாவது இந்திய உடல் உறுப்புதான விழா 2016 நவம்பர் 30 அன்று புதுடெல்லியல் நடைபெற்றது. இதில் நாட்டிலேயே உடல்உறுப்பு தானத்தில் முதலிடம் பிடித்தமைக்காக தமிழக அரசிற்கு தொடர்ந்து இரண்டாவது வருடமாக விருது வழங்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 845 கொடையாளர்களிடமிருந்து 4992 உறுப்புக்கள் தானம் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 • ரும்பர (Rumba Dance) எனும் கியூபாவின் ஒருவகை நடனம், பெல்ஜியத்தின் பீர் கலாச்சாரம் (Beer Culture)ஆகிய இரண்டும் யுனெஸ்கோவின் தொட்டுணரமுடியா பாரம்பரியச் சின்னங்கள் (Intangible Heritage) பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
 • இங்கிலாந்து மத்திய வங்கியினால் 2016 செப்டம்பரில் வெளியிடப்பட்ட புதிய 5 பவுண்டு (ஸ்ரீ 5) நோட்டில் மிருகங்களின் கொழுப்பு கலந்துள்ளது எனத் தெரியவந்ததையடுத்து புதிய 5 பவுண்ட் நோட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்த 36,384 குடும்பங்களுக்கு ‘2000 கோடி மதிப்பிலான நிதியுதவித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • சர்ச்சைக்குரிய மூன்று பெற்றோர்களின் மூலம் குழந்தை பெறும் மைட்டோகாண்ட்ரியல் ஜீன் தெரபி முறைக்கு (Three Parent babies Mitochondrial gene Therapy) இங்கிலாந்தைச் சார்ந்த அறிவியலறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு ஒப்புதல் அளித்துள்ளது.
 • இந்திய டென்னிஸ் சங்கத்தின் முதல் பெண்தலைவராக ஓய்வுபெற்ற இந்திய வருவாய்த் துறை அதிகாரியான பிரவீன் மகாஜன் 2016 டிசம்பர் 1 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
 • இந்தியாவின் மிகப்பெரிய சுரங்கக் குழாய் நீர் விநியோகத் திட்டம் 2016 டிசம்பரில் 1 அன்று மகாராஷ்டிரத்தில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. தானே மாவட்டத்தின் குந்தாவளியிலிருந்து மும்பையின் பாண்டுப் வரையிலான 15 கி.மீ தொலைவுக்கு இக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
 • பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்தியாவிலேயே முதன்முறையாக ஹரியானா மாநில அரசு, மகளிர் காவல் தன்னார்வலர்களை (Mahila Police Volunteer) நியமிக்கவுள்ளது. ஒரு கிராமத்திற்கு தலர ஒருவராக நியமிக்கப்படும் இந்த மகளிர் காவல் தன்னார்வலர்கள் பெண்களுக்கும் காவல்துறைக்குமிடையே ஒரு உறவுப் பாலமாக செயல்படுவர்.
 • ஐதராபாத்திலுள்ள இராஜீவ் காந்தி சர்வதேச விமானநிலையம் (RGLA) கார்பன் வெளியீடற்ற விமான நிலையமாக 2016-இல் மத்திய அரசினால் 2016 டிசம்பரில் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
 • வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டிற்கான ஆறாவது ஆசிய பசிபிக் பிராந்திய அமைச்சர்கள் மாநாடு 2016 டிசம்பரில் புது டெல்லியில் நடைபெற்றது.
 • தென்சீனக் கடல் பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக சுனாமி முன்னெச்சரிக்கை தகவல்களை அந்நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா முன்வந்துள்ளது.
 • இந்தியக் கடற்படை, கடலின் ஆழத்தில் கண்காணிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் அபய், ஹம்சர யுஜி, AIDSS, NACS எனும் நான்கு புதிய சோனார்களை கப்பல்களில் பொருத்தியுள்ளது.
 • ஒளிச்சேர்க்கையை ஊக்குவிப்பதன் மூலம் தாவரங்களை மிகவேகமாக வளரச் செய்யும் உயிரியல் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் பயிரின் வளர்ச்சிக்காலம் குறைவதுடன் மகசூல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கின்றது.
 • ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு 2016 நவம்பரில் ஜீலம்-தாபி வெள்ள மறுசீரமைப்பு திட்டத்தினைத் துவங்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் பெய்த பெருமழையின் போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 • மூளை நரம்புகள் பாதிக்கப்பட்ட நெதர்லாந்தைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கு அவரது மூளையில் கணினியுடன் இணைக்கப்பட்ட சில்லு(CHIP) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இக்கணினியின் வழியே அவர் தாம் நினைத்தவற்றை பிறருக்குத் தெரியப்படுத்துவதுடன் ஓரிரு சிறு செயல்களை செய்யவும் இயலும். உலகிலேயே கணினி சில்லு ஒன்று மூளையாகச் செயல்படுவது இவர் ஒருவருக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x