4,963 இடங்களை நிரப்ப குரூப் – 4 தேர்வு

4,963 இடங்களை நிரப்ப குரூப் – 4 தேர்வு

தமிழக அரசின் பல துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, குரூப் – 4 பணி யிடங்களில், காலியாக உள்ள, 4,963 இடங்களை நிரப்ப, டிச., 21ல் போட்டி தேர்வு நடக்கிறது. இது குறித்த அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), இன்று வெளியிடுகிறது.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வித்தகுதி, 10௦ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), இன்று முதல், நவம்பர், 12ம் தேதி வரை, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்த, நவ., 14ம் தேதி கடைசி நாள். போட்டித்தேர்வு, டிச., 21ம் தேதி நடக்கிறது. குரூப் – 4 தேர்வு என்றாலே, போட்டி கடுமையாக இருக்கும். இந்த தேர்வுக்கு, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/5/d790946132/htdocs/exammaster.co.in/wp-content/plugins/slickquiz/php/slickquiz-front.php on line 59