4.98 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 ரிசல்ட் வெளியீடு

4.98 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 ரிசல்ட் வெளியீடு

குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-2 தேர்வில் அடங்கிய துணை வணிக வரி அதிகாரி, சார் பதிவாளர் (கிரேடு-2), சிறை துறை நன்னடத்தை அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 19 துறைகளில் காலியாக உள்ள 1,047 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4 லட்சத்து 98 ஆயிரத்து 471 பட்டதாரிகள் எழுதினர். இதற்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை:

குரூப்2 தேர்வில் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்துத் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 11,497 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்து தேர்வு நவம்பர் 8ம் தேதி நடைபெறும்.