3 மாதங்களில் 2,000 உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல்: டி.ஆர்.பி

3 மாதங்களில் 2,000 உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல்: டி.ஆர்.பி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.

முதலில், 1,060 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தது. இதற்கு 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தகுதியானவர்களுக்கு, சமீபத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன்பின், நேர்முகத் தேர்வையும் நடத்தியது.

இந்நிலையில், மொத்த காலி பணி இடங்கள் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், “2,000 உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்” என தெரிவித்தார்.