மே 8ம் தேதி முதல் சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம்

மே 8ம் தேதி முதல் சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், மே 8ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., பட்டப் படிப்பு எல்.எல்.பி.,யாக மாற்றப்படுகிறது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும் ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கும் தேதியை, துணைவேந்தர் வணங்காமுடி அறிவித்துள்ளார்.

* பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் அறிவுறுத்தலின் பேரில், வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., படிப்பின் பெயர் எல்.எல்.பி., என்றும், எம்.எல்., படிப்பு எல்.எல்.எம்., என்றும் மாற்றப்படுகிறது.

* வரும் கல்வியாண்டில் சேர்வோருக்கு புதிய பெயரில் பட்டம் வழங்கப்படும். ஏற்கனவே படிப்போருக்கு, பி.எல்., – எம்.எல்., பட்டமே வழங்கப்படும்.

* பல்கலையின் பி.ஏ., – பி.பி.ஏ., – பி.காம்., – பி.சி.ஏ., ஹானர்ஸ் எல்.எல்.பி., படிப்புகளுக்கு, மே 8ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்.

* எல்.எல்.பி., ஹானர்ஸ், எல்.எல்.எம்., (ரெகுலர்) மற்றும் எம்.சி.எல்., (டி.டி.இ.,) படிப்புக்கு மே, 25ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்.

* தொலைதூரக் கல்வியில் முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு மற்றும் மூன்றாண்டு எல்.எல்.பி.,க்கு, மே 25ம் தேதி முதலும், அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ., எல்.எல்.பி.,க்கு, மே 14ம் தேதி முதலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

* ஹானர்ஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள், அம்பேத்கர் பல்கலையில் மட்டுமே கிடைக்கும்.