நவம்பர் 24

நவம்பர் 24
  • 1949 – திருவாங்கூர், கொச்சி, மைசூர் சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைந்தன.
  • 1956 – 2500 ஆவது புத்த ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
  • 1956 – அரியலூர் ரெயில் விபத்து நடந்த நாள். நான்கு நாட்களாக தொடர்ந்த மழையின் காரணமாக அரியலூர் ரெயில் பாலத்தின் அடியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற எக்ஸ்பிரஸ், வழியில் இப்பாலத்தின் மீது போகும் போது பாலம் இடிந்து, இன்ஜினும், 7 பெட்டிகளும் ஆற்றுக்குள் விழுந்தன. ரெயில் பெட்டிகளை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. இந்த விபத்தில் 250 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
  • 1963 – அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப். கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டு, டல்லாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லீ ஹார்வி ஆஸ்லால்டு, (இரவு விடுதி உரிமையாளர் ஜாக் ரூபி என்பவரால்) சிறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.
  • 1866 – அலகாபாத் உயர் நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் தொடங்கப்பட்டது. முதலில் ஆக்ராவில் இயங்கி வந்த இது, 1869 ஆம் ஆண்டு அலகாபாத்திற்கு மாற்றப்பட்டது.