நவம்பர் 19

நவம்பர் 19
  • 1887 – நியூயார்க் நகரில் சுதந்திர தேவி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்ட பாடலை எழுதிய புகழ்மிக்க அமெரிக்க பெண் கவிஞர் எம்மா லாசரஸ் நியூயார்க்கில் காலமானார்.
  • 1977 – ஆந்திராவில் குண்டூர் பகுதியில் மணிக்கு 150கி.மீ. வேகத்தில் வீசிய கடுமையான சூறாவளியால் சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். வீடுகள், விளை நிலங்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.
  • 1982 – திருவனந்தபுரத்தில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டது.
  • 1994 – 21 வயதான ஐஸ்வர்யா ராய் ’உலக அழகி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த உலக அழகிப் போட்டி தென் ஆப்பிரிக்காவின் சன்சிட்டியில் நடந்தது.
  • நவம்பர் 19 – தேசிய ஒருமைப்பாட்டு தினம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள், தேசிய ஒருமைப்பாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.எந்த பேதங்களும் இன்றி நாம் இந்தியர் என்ற ஒரே உணர்வோடு வாழ வேண்டும் என்ற சிந்தனையை மக்கள் அனைவருக்கும் விதைப்பதே தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கம்.