
முதலமைச்சர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் 2014 பிப்ரவரி 14-ஆம் தேதியன்று சென்னை உள்பட தமிழ்நாட்டில் பத்து இடங்களில் மாபெரும் ரத்ததான முகாம்கள் நடைபெற்றன. இதில் உலக சாதனையாக 53 ஆயிரத்து 129 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இந்த கின்னஸ் உலக சாதனையை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், கின்னஸ் அமைப்பு பிரதிநிதி லுசியா சந்தித்து கின்னஸ் உலக சாதனைக்களை சான்றிதழை வழங்கினார். இந்த முகாம் மூலம் 18,439.28 லிட்டர் ரத்தம் பெறப்பட்டுள்ளது.