டிசம்பர் 06

டிசம்பர் 06
  • 1956 – பி.ஆர். அம்பேத்கார் மறைந்தார்.
  • 1982 – க. கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மறைந்தார்.

பி. ஆர். அம்பேத்கர்

பிறப்பு : 14 ஏப்ரல் 1891 (மத்தியப் பிரதேசம்)

இறப்பு : 6 டிசம்பர் 1956

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பாபா சாகேப்) நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். ஆகஸ்ட் 29 இல் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.

புனே உடன்படிக்கை :

இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” ராம்சே மெக்மெனால்ட் அவர்களால் வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இதன் விளைவாக செப்டம்பர் 24 – 1931 ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே ‘பூனா ஒப்பந்தம்‘ ஏற்பட்டது.

இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித் தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.

சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

க. கைலாசபதி

பிறப்பு : ஏப்ரல் 5, 1933

இறப்பு : டிசம்பர் 6, 1982

இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமின்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது.

இவரது நூல்கள்

அடியும் முடியும்

பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்

தமிழ் நாவல் இலக்கியம்

இலக்கியச் சிந்தனைகள்

ஒப்பியல் இலக்கியம்