சரிவில் Gross Domestic Product (GDP)

சரிவில் Gross Domestic Product (GDP)

– வீ.வீ.கே. சுப்புராஜ்

தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistical Office) சமீபத்தில் வெளியிட்டுள்ள  முன்கூட்டிய மதிப்பீட்டின்படி இந்தியப் பொருளாதார வளர்ச்சி, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அடிப்படையில் 2019-20 ஆண்டில் 4.98 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும். 2008-09 ஆண்டின் வளர்ச்சியான 3.89 சதவீதத்தை ஒப்பிட்டு நாம் பெருமை தேட முடியாது. ஏனென்றால் அந்த ஆண்டு உலகமே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித்தவித்த சமயம். 2002-03 ஆண்டிற்குப்பிறகு இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஒற்றை இலக்கத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது இந்த ஆண்டில்தான். 1975-76-இல் கூட இது 7.35 சதவீதமாக இருந்தது.

பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் வித்தியாசம் யாதெனில், முன்னே கூறப்பட்டுள்ளது பணவீக்கத்தை உள்ளடக்கியது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சதவீத வளர்ச்சிகள் எல்லாம் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியேயாகும். பணவீக்கத்தை மனதில் கொள்ளவும். 2015-16-இல் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது. பணவீக்கத்தைக் கூட்டினால் அது 10.5 சதவீதமாகும். நான்கு ஆண்டுகளில் இது அதலபாதளத்திற்குச் சென்றுள்ளது. காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, GST என்று கூறப்பட்டாலும், முழுமையாக இந்தியப்பொருளாதார அமைப்பே மாற்றத்திற்கு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அதன் மேல் செலுத்தப்பட்ட கவனம், பொருளாதார வளர்ச்சியில் செலுத்தப்படவில்லை.

இந்தப்புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன என்றால், 2.6 சதவீத உண்மையான பொருளாதார வளர்ச்சியை 2.5 சதவீத பணவீக்கம் விழுங்கிவிட்டது. தொழில் நிறுவனங்கள் லாபம் ஏதும் ஈட்டவில்லை என்பதையே காட்டுகிறது.

தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி 14-15 சதவீதத்தில் இருந்த காலகட்டத்தில், அவை தங்களுடைய விற்றுமுதலை (turnover) இரட்டிப்பாக்க 5 ஆண்டுகள் பிடித்தன. இன்றைய சூழ்நிலையில், 10 ஆண்டுகளுக்குமேல் ஆகலாம். இந்தக்காலகட்டத்தில் மற்ற செலவினங்களின் அதிவேக உயர்வை கணக்கில் கொண்டால், தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம். இது பொருளாதாரத்தை இன்னும் மோசமாகப் பாதிக்கும்.

2019-20 பட்ஜெட் தாக்கலின்போது, நிதி அமைச்சர் அவர்கள் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 12 சதவீதம் என்ற அளவில் உயரும் என்று கணித்தார். அதன்படி 211.01 லட்சம் கோடி அளவிற்கு உயர வேண்டும். ஆனால் அது 204.42 லட்சம் கோடி என்ற அளவிலேயே நின்றுள்ளது. பற்றாக்குறை 6,58,374 கோடி ரூபாயாகும். அறிவித்தபடி பற்றாக்குறை அளவை 7,03,760 கோடி ரூபாய் என்ற அளவில் கட்டுப்பாட்டில் வைத்தாலும் கூட அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.44 சதவீதமாக இருக்கும். ஆனால் நிர்ணயம் செய்யப்பட்டது 3.3 சதவீதம் மட்டுமே.

இந்த நிலைமை மத்திய பட்ஜெட் மதிப்பீடுகளை மட்டுமல்லாது மாநில பட்ஜெட் மதிப்பீடுகளையும் கடுமையாக பாதிக்கும். 14 சதவீதத்திற்கு அதிகமாக துண்டுவிழும் சமயத்தில், மத்திய அரசு ழுளுகூ வருமானத்திலிருந்து அதை சரி செய்யும். இப்போது அப்படிச் செய்தாலும், அது உண்மையாக 7.5 சதவீதம் என்ற அளவையே பூர்த்தி செய்யும்.

இந்த ஒற்றை இலக்க பொருளாதார வளர்ச்சி 2000-01 வடி 2002-03 ஆகிய மூன்று ஆண்டு காலங்கள் நீடித்தது. அப்போது வாஜ்பாய் அவர்கள் தலைமை அமைச்சராக இருந்தார். 2000-01-இல் 7.62ரூ, 2001-02-இல் 8.2ரூ, 2002-03-இல் 7.66ரூ, அதுவும் பெயரளவிலான உள்நாட்டு வளர்ச்சியே.

உண்மை வளர்ச்சி இன்னும் குறைவு. அவை முறையே 3.8ரூ, 4.8ரூ & 3.8ரூ என்ற அளவுகளில் இருந்தன. அவைகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டின் வளர்ச்சி சற்று கூடுதலாகும். எனினும், கடந்த மாதங்களில், இந்திய அரசு எடுத்துள்ள பல பொருளாதார நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை வேகமான வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும் என நம்புவோம்.