டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் இணையதளத்தி்ல் வெளியிடப்பட்டுள்ளது.
5,451 அரசுத் துறை பணியிடங்களுக்கான குரூப் – 4 தேர்வு நவ.,6 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது.
இதனை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளங்களான www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதாவர்கள் contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு பணம் கட்டிய ரசீதுடன் அக்.,31 தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.





