குரூப் 1 தேர்வுக்கான முடிவு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

குரூப் 1 தேர்வுக்கான முடிவு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

குரூப் 1 தேர்வுக்கான முடிவு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படுமென்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-14ம் ஆண்டுக்கான 2,233 விஏஓ பதவிக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி நடந்தது. இதில், 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர் தேர்வு எழுதினர். இதன் தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 259.5 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த தர்மபுரியை சேர்ந்த இளவரசு, 256.5 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடம் பிடித்த ரேவதி, 256 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடம் பிடித்த ஈரோடை சேர்ந்த கணேசன், 255 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பிடித்த வேலூரை சேர்ந்த சதீஷ் ஆகிய 4 பேருக்கும் மாவட்ட வாரியான இடஒதுக்கீட்டு ஆணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் வழங்கினார்.
இதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 2,233 விஏஓ காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் வெற்றி பெற்ற 259 பேரை சேர்த்து மொத்தம் 2ஆயிரத்து 259 பேருக்கான நேர்காணல் நேற்று முன்தினம் முதல் வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. 2014-15க்கான தேர்வு அட்டவணை வரும் 30ம் தேதி வெளியிடப்படுகிறது. ஏற்கனவே நடந்த குரூப் 1 தேர்வுக்கான முடிவு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். அதைதொடர் ந்து குரூப் 2 தேர்வுக்கான முடிவு இரண்டு வாரத்தில் வெளியிடப்படும். வரும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் குருப் 1 தேர்வுக்கான உத்தேசமாக 50 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. டிஎன்பிஎஸ்சி மூலம் முதன்முறையாக உதவி வேளாண் துறை அதிகாரி பணியிடத்திற்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் காலியாக உள்ள 444 காலிபணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ வேளா ண்மை தொடர்பான படி ப்பு முடித்து இருக்க வேண்டும். அதேபோல தொழில்துறையில் கெமிஸ்ட் பதவிக்கான 3 காலி பணியிடங் களும் நிரப்பபடுகிறது. இதற்கு எம்எஸ்சி கெமிஸ் ட்ரி கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.