
இந்தியாவில் உருவாக்கப்பட்ட நாட்டின் மிக பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ்., கோல்கட்டா இன்று கடற்படையில் சேர்க்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி இதன் செயல்பாட்டை துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மும்பை கடற்படை தளத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி மகாராஷ்ட்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான், கடற்படை தளபதி தோவன் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் பணிகள் துவங்கி பல ஆண்டுகள் பின்னர் இந்த போர்க்கப்பல் இறுதி வடிவம் பெற்றது. ஐ.என்.எஸ்., சென்னை, ஐ.என்.எஸ்.,கொச்சி என்ற போர்க்கப்பலும் உருவாகும் பணியில் இருந்து வருகிறது.