பிஇ, பிடெக். படிப்பில் 2-ம் ஆண்டில் சேர விண்ணப்பிக்கலாம்

பிஇ, பிடெக். படிப்பில் 2-ம் ஆண்டில் சேர விண்ணப்பிக்கலாம்

பொறியியல் பட்டப்படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர பாலிடெக்னிக் முடித்தவர்களும், பிஎஸ்சி பட்டதாரிகளும் மே 24-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்து உள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் ‘லேட்ரல் என்ட்ரி’ எனப்படும் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கப்படுகின்றன. இதில், பாலிடெக்னிக் டிப்ளமா முடித்தவர்கள், பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் கணிதம் பயின்ற பிஎஸ்சி பட்டதாரிகள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 2016-17ம் கல்வி ஆண்டில் ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் சேர பாலிடெக்னிக் டிப்ளமாதாரர்களும், பிஎஸ்சி பட்டதாரிகளும் மே 24-ம் தேதி முதல் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.