பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அதிரடி முடிவு

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அதிரடி முடிவு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவிருந்த இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை இந்தியா திங்கள்கிழமை ரத்து செய்தது. காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த அதிரடி நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.

இந்நிலையில், தில்லியில் கடந்த மே மாதம் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் அவரது அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கலந்து கொண்டார். அப்போது இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன்படி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை இம்மாதம் 25ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களின் கருத்துகளை அறிவதற்காக, அந்த இயக்கங்களின் தலைவர்களை ஆலோசனை நடத்த வருமாறு, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று தில்லியில் அப்துல் பாசித்தை, ஜனநாயக விடுதலை கட்சித் தலைவர் ஷபீர் ஷா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து பிற காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை அப்துல் பாசித் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) சந்தித்துப் பேசுவதாக இருந்தது.

பாகிஸ்தானின் இந்தச் செயலால் அதிருப்தி அடைந்த இந்தியா, பாகிஸ்தானுடன் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவிருந்த வெளியுறவுத் துறைச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை திங்கள்கிழமை ரத்து செய்தது. அப்துல் பாசித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதனை வெளியுறவுத் துறைச் செயலர் சுஜாதா சிங் தெரிவித்தார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் தகவலை வெளியுவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவது, இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடும் செயலாகும். இதுபோன்று இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தொடர்ந்து தலையிடுவதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் தூதரிடம் சுஜாதா சிங் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கூறிவிட்டார்.

ஹுரியத் தலைவர்களை பாகிஸ்தான் தூதர் சந்தித்துப் பேசுவது, இரு நாடுகள் இடையேயும் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சியின் முதல் நாளில் தொடங்கிவைத்த நடவடிக்கைக்கு எதிரானதாகும். எனவே, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? அல்லது காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? என்று பாகிஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அப்துல் பாசித்திடம் சுஜாதா சிங் கண்டிப்புடன் தெரிவித்தார்.

இரு தரப்பு உறவை மேம்படுத்தவும், இரு நாடுகளிடையே தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறவும் இந்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நேரத்தில், ஹுரியத் தலைவர்களுக்கு பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருப்பது, அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானுக்கு உண்மையில் ஆர்வமுள்ளதா? என்ற சந்தேகத்தையும், பாகிஸ்தானின் எதிர்மறை எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவுடனான பிரச்னைகளுக்கு சிம்லா உடன்படிக்கை, லாகூர் பிரகடனம் ஆகியவற்றுக்கு உள்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பது என்ற ஒரே வழிதான் பாகிஸ்தானுக்கு தற்போது உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இஸ்லாமாபாதுக்கு அடுத்த வாரம் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் செல்வதால் எந்தவித பலனும் ஏற்படாது என்று இந்தியா கருதுகிறது. எனவே, இஸ்லாமாபாதுக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியுறவுத் துறைச் செயலர் மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் சையத் அக்பருதீன்.

பின்னடைவை ஏற்படுத்தும்: பாகிஸ்தான்
வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை ரத்து செய்யும் முடிவு, இந்தியாவுடன் நல்ல அண்டை நாடு என்ற உறவை ஏற்படுத்த தங்கள் நாட்டுத் தலைமை மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை என்பது நீண்டகாலம் நடைபெறக் கூடியது. அப்போது காஷ்மீர் பிரச்னை குறித்து ஆக்கப்பூர்வமான வகையில் பேசுவதற்கு வசதியாகவே காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்/புது தில்லி, ஆக. 18: பாகிஸ்தானுடனான வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹுரியத் மாநாட்டு தலைவர் மீர்வாய்ஸ் உமர், பரூக் பி.டி.ஐ. செய்தியாளரிடம் தெரிவித்தது: “வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலங்களிலும் பிரிவினைவாத தலைவர்களை பாகிஸ்தான் அழைத்துப் பேசியுள்ளது. அதுபோல்தான் தற்போதும் அழைப்பு விடுத்துள்ளது.

இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்றும், இதன்மூலம் இந்திய, பாகிஸ்தான் அரசுகள் இணைந்து காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சி எடுக்கும் எனவும் எதிர்பார்த்திருந்தோம். இந்த நிலையில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது மிக மிக துரதிருஷ்டவசமானது’ என்றார்.

ஜே.கே.எல்.எஃப். அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் கூறியது: “பிரிவினைவாதத் தலைவர்களை அழைத்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மட்டும் அதைக் காரணமாக வைத்து பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது. இந்திய துணைக் கண்டத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறதா, இல்லையா எனத் தெரியவில்லை’ என்றார்.

ஜனநாயக விடுதலை கட்சித் தலைவர் ஷபீர் ஷா கூறுகையில், “பேச்சுவார்த்தையை ரத்து செய்யும் இந்தியாவின் முடிவால் குழப்பம் ஏற்படும்’ என்றார்.

துரதிருஷ்டவசமானது: பிரிவினைவாத தலைவர்கள்

வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை ரத்து செய்யும் முடிவு, இந்தியாவுடன் நல்ல அண்டை நாடு என்ற உறவை ஏற்படுத்த தங்கள் நாட்டுத் தலைமை மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை என்பது நீண்டகாலம் நடைபெறக் கூடியது. அப்போது காஷ்மீர் பிரச்னை குறித்து ஆக்கப்பூர்வமான வகையில் பேசுவதற்கு வசதியாகவே காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடனான வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹுரியத் மாநாட்டு தலைவர் மீர்வாய்ஸ் உமர், பரூக் பி.டி.ஐ. செய்தியாளரிடம் தெரிவித்தது: “வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலங்களிலும் பிரிவினைவாத தலைவர்களை பாகிஸ்தான் அழைத்துப் பேசியுள்ளது. அதுபோல்தான் தற்போதும் அழைப்பு விடுத்துள்ளது.

இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்றும், இதன்மூலம் இந்திய, பாகிஸ்தான் அரசுகள் இணைந்து காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சி எடுக்கும் எனவும் எதிர்பார்த்திருந்தோம். இந்த நிலையில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது மிக மிக துரதிருஷ்டவசமானது’ என்றார்.

ஜே.கே.எல்.எஃப். அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் கூறியது: “பிரிவினைவாதத் தலைவர்களை அழைத்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மட்டும் அதைக் காரணமாக வைத்து பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது. இந்திய துணைக் கண்டத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறதா, இல்லையா எனத் தெரியவில்லை’ என்றார்.

ஜனநாயக விடுதலை கட்சித் தலைவர் ஷபீர் ஷா கூறுகையில், “பேச்சுவார்த்தையை ரத்து செய்யும் இந்தியாவின் முடிவால் குழப்பம் ஏற்படும்’ என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x