தமிழகத்தில் 73.67 சதவீத வாக்குப்பதிவு

தமிழகத்தில் 73.67 சதவீத வாக்குப்பதிவு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில், ஆண்களை விட பெண்களே அதிகளவு வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் 73.49 சதவீத ஆண்களும், 73.85 சதவீத பெண்களும் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் 12.72 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். மாநிலத்தில், மொத்தம் 5 கோடியே 51 இலட்சத்து 14 ஆயிரத்து 867 வாக்காளர் உள்ளனர். அவர்களில் 73.67 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, 4 கோடியே 6 லட்சத்து 3 ஆயிரத்து 123 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.14 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 60.37 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 74.1 சதவீதம் ஆண்களும், 71.9 சதவீதம் பெண் வாக்காளர்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x