தஞ்சாவூர் வீணைக்குப் புவிசார் குறியீடு

தஞ்சாவூர் வீணைக்குப் புவிசார் குறியீடு

பாரம்பரியக் கலையைப் பாதுகாப்பதற்காக வழங்கப்படும் புவிசார் குறியீடு தஞ்சாவூர் வீணைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வீணை இசைக் கருவி பண்டைய காலம் தொட்டு வாசிக்கப்பட்டு வந்தாலும், தஞ்சாவூரில் கி.பி.17- ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னர் காலத்தில்தான் தற்போதைய வடிவத்தை அடைந்தது. எனவே, இதற்கு தஞ்சாவூர் வீணை” எனப் பெயர் சூட்டப்பட்டது.

மைசூர் வீணை, திருவனந்தபுரம் வீணை போன்றவை இருந்தாலும், அவற்றை விட தனிச்சிறப்பு கொண்டது தஞ்சாவூர் வீணை. அனைத்து ராகங்களையும் மீட்டக்கூடிய விதமாக வடிவமைக்கப்பட்ட வீணை இது. எனவே, இந்த வீணை உலக அளவில் பிரசித்தி பெற்றது. தஞ்சாவூர் வீணைக்குப் புவிசார் குறியீடு அண்மையில் கிடைத்தது.
இதன்படி, திருபுவனம் பட்டு, நெல் மாலை ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைத்துவிடும். மேலும், சீரகச் சம்பா, மரக்குதிரை, திருவையாறு அசோகா அல்வா, கும்பகோணம் வெற்றிலை ஆகியவற்றுக்கும் புவிசார் குறியீடு பெற பதிவு செய்யப்பட்டுள்ளது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x