டிஎன்பிஎஸ்சி 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் அட்டவணை வெளியீடு

டிஎன்பிஎஸ்சி 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் அட்டவணை வெளியீடு

2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 9 தேர்வுகள் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் அருள்மொழி கூறியுள்ளார். சென்னையில், 2016ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. பின் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி பேசியதாவது, குரூப் 4 தேர்வுகளின் மூலம் 4,931 பேரும், துணை கலெக்டர்களை தேர்ந்தெடுப்பதற்காக குரூப் 1 தேர்வு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுகள், இந்தாண்டு நடைபெற உள்ளதாக அருள்மொழி கூறினார்.