ஜிசாட் – 30 செயற்கைக்கோள்

ஜிசாட் – 30 செயற்கைக்கோள்

2020-ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30, பிரான்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ’ஏரியன் 5 விஏ-251 என்ற ராக்கெட் மூலம் 2020 ஜனவரி 17 அன்று தென் அமெரிக்கப் பகுதியில் உள்ள பிரெஞ்ச் கயானா கொரு ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. இதனுடன் பிரான்ஸைச் சேர்ந்த இடெல்சாட் நிறுவனத்தின் இடெல்சாட் கனெக்ட் என்ற செயற்கைக்கோளும் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 38 நிமிடங்கள் 25 விநாடிகளில் 3,357 கிலோ எடை கொண்ட ஜிசாட்-30 செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு திட்டமிட்ட தற்காலிக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள். ஏற்கனவே விண்வெளியில் செயல்பாட்டில் இருக்கும் இன்சாட்-4ஏ தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோளுக்கு மாற்றாக இந்த ஜிசாட்-30 செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியுள்ளது.

பயன்பாடுகள் :

இந்த அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள் அதிலுள்ள கே.யு. பேன்ட் அலை வரிசை

மூலமாக இந்தியா மற்றும் அதன் தீவுகளுக்கு மட்டுமின்றி வளைகுடா நாடுகள் உள்ளிட்ட ஏராளமான ஆசிய நாடுகளுக்கும் தகவல் தொடர்பு சேவையை வழங்கவுள்ளது.

மேலும் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருக்கும் சி-பேன்ட் மூலம் ஆஸ்திரேலியாவுக்கும் தகவல் தொடர்பு சேவையை அளிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், டிடிஹெச் தொலைக்காட்சி சேவை, ஏடிஎம், பங்கு வர்த்தகம், டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, இ-நிர்வாகத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் இந்த செயற்கைக்கோள் உதவவுள்ளது.

ககன்யான் திட்டத்தில் முக்கியப் பங்காற்றும் ’வியோம் மித்ரா பெண் ரோபோ

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ’ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஐளுசுடீ) திட்டமிட்டுள்ளது. மனிதனை முதல்முறையாக விண்ணுக்கு அனுப்புவது தவிர, விண்வெளியில் தொடர்ந்து மனிதச் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில், புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முயற்சியாகவும் இத்திட்டத்தை செயல்படுத்த இந்தியா முனைந்துள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக சோதனை முயற்சியாக நிகழாண்டில் (2020) டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டில் (2021) ஜூன் மாதத்தில் ஆளில்லா விண்கலன்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2021 டிசம்பரில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ’ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளது. விண்ணுக்குச் செல்லும் விண்வெளி வீரர்களை இந்திய விமானப் படையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் அங்கமாக விண்ணுக்குச் செலுத்தப்படும் ஆளில்லா விண்கலத்தில் ’வியோம் மித்ரா (விண் நண்பர்) எனப்படும் பெண் ரோபோவும் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. ’வியோம் என்றால் சமஸ்கிருதத்தில் ’சொர்க்கம் என்று பொருள். ’மித்ரா என்றால் ’நண்பர் என்று பொருள்.

பெண் ரோபோவின் செயல்பாடுகள் :

விண்கலத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பது.

உயிர் பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்வதோடு, அது தொடர்பான முன்னெச்சரிக்கைகளை வழங்குவது

இணைப் பயணியாக ஈடுபடுவதோடு விண்வெளி வீரர்களுடன் உரையாடுதல் விண்வெளி வீரர்களை அடையாளம் காண்பதோடு, அவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிப்பது.