சிலவரிச் செய்திகள் – 21

  • இந்தியாவில் 4.6 கோடி குழந்தைகள் வளர்ச்சி குறைபாடுடன் இருப்பதாக உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை தெரிவித்துள்ளது.
  • நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் காந்தின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அரசு உத்தரவு 2019 ஜூன் 26 அன்று வெளியானது.
  • 50 பைசா நாணயம் உட்பட தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 43 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனையை அமல்படுத்துவதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அனுமதி வழங்கி உள்ளார்.
  • மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லும் என்றும் எனினும், அந்த சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது நியாயமில்லை என்றும் அரசு வேலைவாய்ப்பில் 12 சதவீதமும் கல்வியில் 13 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்தில் ‘ 20 கோடி செலவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தனி விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பொது சேமநல நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி) உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஆண்டு வட்டி விகிதம், தற்போதைய 8 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் குறைக்கப்பட்டு 7.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சீனா உருவாக்கியுள்ள நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக் கூடிய ’பலிஸ்டிக் ரக ஏவுகணையான ஜேஎல்-3, 2019 ஜூன் 27 அன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
  • தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இணையவழி நேரலை முறை மூலம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் இதுபோன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளின் மூலம் பட்டமளிப்பு விழா நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.