குரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

குரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு வரும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப் பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வு நடக்கிறது.

இந்தத் தேர்வுக்கென 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் தயாராக உள்ளன. இந்த நுழைவுச் சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in–ல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து. நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.