காலிப் பணியிட பட்டியல் கிடைத்ததும் போட்டித் தேர்வுகளை அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி. முடிவு

காலிப் பணியிட பட்டியல் கிடைத்ததும் போட்டித் தேர்வுகளை அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி. முடிவு

தமிழக அரசுத் துறைகளின் காலிப் பணியிடங்கள் பட்டியல் கிடைத்ததும், போட்டித் தேர்வுகளை அறிவிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஜன., 30ம் தேதி, போட்டித் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, குரூப் – 1, குரூப் – 2 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் வரிசையாக அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அரசுத் துறைகளில் காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருவதற்கு முன், காலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

அரசுத் துறை காலிப் பணியிடங்களின் பட்டியலை அனுப்புமாறும், ஆட்கள் தேர்வுக்கான விவரங்களை தரவும், தேர்வாணையம் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அரசிடமிருந்து பட்டியல் கிடைத்ததும், ஒவ்வொரு துறைக்கும் போட்டித் தேர்வுகளை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.