கல்விக் கடன் பெற மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

கல்விக் கடன் பெற மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

12-ம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும். பி.இ. உள்ளிட்ட படிப்புகளுக்காக வங்கிகளிடம் கல்விக் கடன் பெற உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏ. ரவி என்பவரது மகன் 12-ம் வகுப்பில் 59 சதவீத மதிப்பெண்கள் பெற்று, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பில் சேர்ந்தார், தனது மகனுக்கு பி.இ. பயில்வதற்காக ` 1 லட்சத்து 88 ஆயிரம் கல்விக் கடனாக வழங்கும்படி திருப்பூர் பெரமணல்லூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரவி விண்ணப்பம் அளித்தார்.

எனினும் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், மனுதாரரின் மகன் 59 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ள தால் கல்விக் கடன் வழங்க முடியாது எனவும் ஐ.ஓ.பி. நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரவி மனு தாக்கல் செய்தார் மனுதாரரின் மகனுக்கு கல்விக் கடன் வழங்கும்படி தனி நீதிபதிகள் என். பால் வசந்தகுமார், எம். சத்தியநாராயணன் ஆகியோர் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்தமேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அண்மையில் தீர்ப்பளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *