கணக்கில் புலி: உலக சாதனையாளர் பட்டம் வென்றார் ஈரானிய பெண்

கணக்கில் புலி: உலக சாதனையாளர் பட்டம் வென்றார் ஈரானிய பெண்

உலக கணித அமைப்பு, நடத்திய பரி்சோதனையில் தன்னுடைய திறமையை வெளிப்படு்த்தி சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றார் ஈரானிய நாட்டை சேர்ந்த பெண்ணான மரியம்மிர்ஸாகனி.

உலகளவில் கணித்தில் சிறந்தவர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதனை சர்வதேச கணித அமைப்பு நடத்தி வருகிறது. இறுதிப்போட்டிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் சிறந்து விளங்குபவர்களுக்கு சர்வதேச விருது வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அதற்கான போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் சர்வதேச அளவிலான முதல் பரிசை தட்டிச் சென்றார் ஈரான் நாட்டை சேர்ந்த மரியம் மிர்ஸா கனி என்பவர் .மேலும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இது போன்ற பரிசை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த விருது கணிதத்தில் நோபள் பரிசு என கருதப்படுகிறது.

கடந்த 1977-ம் ஆண்டு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிறந்தார்.தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் கணித பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.

சர்வதேச கணித அமைப்பு நடத்திய போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட தனது ஆய்வுக்கட்டுரையில் கணித நுட்பங்களை பல்வேறு வரம்புகளில்தொழில்நுட்பத்திறன் , தொலைநோக்குபார்வை ஆகிய சேர்க்கையை உள்ளடக்கிய அறி்க்கையை சமர்ப்பித்திருந்தார். இதனை ஆய்வு செய்த போட்டியின் நடுநிலையாளர்கள் முதல்பரிசுக்கான விருதை இவருக்கு வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே கணிதத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வரும் இவர் கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்க கணித சங்கம் நடத்திய ஷாட்டர் பரிசுக்கான விருதையும், 2009-ம் ஆண்டு புளுமெந்தால் விருதையும் பெற்றுள்ளார்.

மேலும் தற்போது நடந்து முடிந்துள்ள போட்டியில் மரியம் மிர்ஸாகனியுடன் பிரான்சின் ஆர்தர் அவிலா நியூஜெர்சி பரின்ஸ்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த மஞ்சுல் பார்கவா, பிரிட்டனின் வார்விக் பல்கலை.,யை சேர்ந்த மார்ட்டின் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

போட்டியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள மரியம் இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மற்ற பெண் அறிவியல் , கணித விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும் எனவும் வரும் காலங்களில் போட்டியில்பங்கேற்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of