அக்டோபர் 22

1925 – தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் அ. மாதவையா மறைந்தார்.

A.Maathavaiya (1)

அ. மாதவையா(ஆகஸ்ட் 16, 1872 – அக்டோபர் 22, 1925) தமிழில் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் என்ற பெருமைக்கு உரியவர்.

அ.மாதவையா,திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பினைத் தொடர்ந்தார்.

சி.வி.சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிகையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத் தொடங்கினார்.

1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டன. பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, அந்நாவல் முழுமையடையாத தருணத்தில், அக்டோபர் 1925 இல் மாதவையா மரணமடைந்தார்.

தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாவது தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், பி.ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்குக் கிட்டாமல் போனது.

மாதவையாவின் படைப்புகள்
நாவல்
பத்மாவதி சரித்திரம் (1898)
முத்து மீனாட்சி (1903)
விஜயமார்த்தாண்டம் (1903)
Thillai Govindan (1903)
Satyananda (1909)

சிறுகதை
Kusika’s Short Stories குசிகா குட்டி கதைகள்

கவிதை
பொது தர்ம சங்கீத மஞ்சரி
புதுமாதிரி கல்யாணப் பாட்டு (1923)
இந்திய தேசிய கீதங்கள் (1925)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *