அக்டோபர் 16

1799-கட்டபொம்மன்ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட நாள்.

அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உலக உணவு நாள்.

வீரபாண்டிய கட்ட பொம்மன் தமிழகத்தில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட பாஞ்சாலங்குறிச்சி மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.

61b755be-b667-44f8-8682-533faa216f93_S_secvpf.gif

இவரது துணைவியார் வீர சக்கம்மாள்.

சகோதரர்கள்: குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர்.

சகோதரிகள்: ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.

அரசுப் பொறுப்பு: இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

1797 இல் முதன் முதலாக ஆங்கிலேயர் ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார்.

1797 – 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார்.

நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார்.

செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்ட பொம்மனைக் கைது செய்ய முயன்றார்.

அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.

செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயேத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது.

அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானால் வீரபாண்டிய கட்ட பொம்மன் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அக்டோபர் 16, 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

உலக உணவு நாளின் கருப்பொருள் :

உலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு குஹடீ ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூரும் வண்ணம் ஐ.நா. இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.

நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் உலக உணவு நாள் கொண்டாடப்படுகிறது.

உலக உணவு நாளின் கருப்பொருள் :

2008 : உலக உணவு பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் சவால்கள்.
2009 : நெருக்கடி காலங்களில் உணவுப் பாதுகாப்பு.
2010 : பட்டினிக்கு எதிராக ஐ.நா (UNO)
2011 : நெருக்கடி காலங்களில் உறுதி செய்யப்பட்ட உணவு விலை.
2012 : வேளாண் கூட்டுறவு – உலக உணவு
2013 : உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து நீடிக்கக் கூடிய உணவு முறைகள்.

அமைதிக்கான நோபல் பரிசு

1979 – அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அன்னை தெரசா அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்திய குடியுரிமை பெற்றவரும் ஆவார்.

இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.

கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் ’ரோஜா அரும்புஎன்று பொருள்.

1910 ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த போதிலும், அவர் திரு முழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார்.

1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்தடைந்து, இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது துறவறம் மேற்கொள்ளத்தக்க பயிற்சியினை ஆரம்பித்தார்.

1952 ஆம் ஆண்டில் கல்கத்தா நகரில் அன்னை தெரசா, இறப்பின் வாயிலிலிருப்போருக்கு முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். 1979 ல், அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

அமைதியின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விருந்தை மறுத்த அவர், அதற்காகும் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

•1962 இல் பத்மஸ்ரீ விருது
•1972 இல் பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது.
•1979 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
•1980 இல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
•தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962 இல், பன்னாட்டு புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் ரமன் மக்சேசே விருதைப் பெற்றார்.

அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 இல் வெளியிடப்பட்டது.

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty)

உலக வறுமை ஒழிப்பு நாள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது.

பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுைம ஒழிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x